Published On: Wednesday, October 22, 2014
மோட்டார் சைக்கிளில் சென்றவர் தரித்து நின்ற வாகனத்தில் மோதி மரணம்
யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மருதடி முருகன் ஆலய பகுதியில் தரித்து நின்றிருந்த மின்சார சபையின் கன்டர் ரக வாகனம் மீது மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்தில் பருத்தித்துறை புட்டலையை சேர்ந்த தவராசா கண்ணதாசன் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார். இவரது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(பாறுக் சிகான்)

