எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, October 18, 2014

பொத்துவிலில் நடைபெற்ற வீதி ஊர்வலமும் தெருநாடகமும்

Print Friendly and PDF

பாடசாலை சமூக திட்டத்தின்கீழ் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியும் பொத்துவில் மத்திய கல்லூரியும் இணைந்து கல்விச் சமூகத்தினருக்கான மூன்றுநாள் வதிவிட பயிற்சியினை பொத்துவில் மத்திய கல்லூரியில் ஏற்பாடு செய்துள்ளது. இப்பயிற்சி 17ஆம் திகதி மாலை 4 மணியளவில் பொத்துவில் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.ஏ. புகாரி தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.


முதலாம் நாள் தகவல் சேகரிப்பும் சமூக விழிப்புணர்வும் எனும் கருத்திட்டத்தில் வீதி ஊர்வலமும் தெருநாடகமும் இடம்பெற்றது. இவ்வீதி ஊர்வலத்தில் தேசியக் கல்விக் கல்லூரி ஆசிரிய மாணவர்கள், விரிவுரையாளர்கள் பொத்துவில் பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் வீதி பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சமூக உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் ஆகியோர் பங்குபற்றினர்.



(எம்.ஏ. தாஜகான்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2