Published On: Monday, October 20, 2014
சட்டம், ஒழுங்குகள் அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் பொலிஸ் மா அதிபர்
சட்டம், ஒழுங்குகள் அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை செவ்வாய்க்கிழமை பத்தரமுல்லை செத்சிறிபாயவில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இதற்கு முன்பு இந்த அமைப்பின் செயலாளராக மேஜர் ஜெனரல் நந்தமல்லவாராய்ச்சி பணியாற்றினார்.
பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின் மகிந்த பாலசூரிய ஐக்கிய அரபுக் குடியசரின் இலங்கை தூதுவராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
