Published On: Monday, October 20, 2014
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று சிங்கப்பூர் பயணம்
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். இவரது பயணத்துக்கான நோக்கம் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. என்னாலும், ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ள இச்சந்தர்ப்பத்தில் ரணில் சிங்கப்பூர் சென்றுள்ளமை குறித்து பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவரின் காரியாலய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
