எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, July 28, 2015

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் எம்.பி.க்கள் நேரில் வந்து அஞ்சலி

Print Friendly and PDF

புது தில்லியில் உள்ள கலாமின் இல்லமான ராஜாஜி மார்கில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடலுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவும், துணைத் தலைவர் ராகுலும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவரது மனைவியுடன் வந்து கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.







பாஜக தலைவர் அமித் ஷா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், மத்திய இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங், ரவி ஷங்கர் பிரசாத் உள்ளிட்டோரும் கலாமின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர். தில்லி ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது இல்லத்துக்கு ராணுவ மரியாதையுடன் எடுத்து வரப்பட்ட அவரது உடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்  உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கலாம் உடலுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்,. சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாய்ம் சிங் யாதவ், ஆகியோர்  உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்களும் மரியாதை செலுத்தினர். புது தில்லியில் உள்ள ராஜாஜி மார்கில் வைக்கப்பட்டுள்ள  அப்துல் கலாமின் உடலுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் மலரஞ்சலி செலுத்தினார்.பிற்பகல் 3.30க்கு பிறகு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படனர்.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2