எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, August 16, 2015

10 இலட்சம் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளதாக நிருவாகத்தின் செயலாளர் மற்றும் வைத்தியர் ஆகியோர் அறிவிப்பு

Print Friendly and PDF

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் 2015 ஆம் ஆண்டுக்கான பண்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் மீனோடைக்கட்டு மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆப் பள்ளிவாயல் கலாச்சார மண்டப நிர்மானப் பணியை மேற்கொள்வதற்கு ரூபா 10 இலட்சம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக பள்ளிவாயலின் செயலாளர் எம்.ஏ.அஷ்ரப் ஞாயிற்றுக்கிழமை (16) தெரிவித்தார்.

மீனோடைக்கட்டு மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆப் பள்ளிவாயல் நிருவாகத்தினர் பள்ளிவாயல் கலாச்சார மண்டப நிர்மானப் பணியை முன்னெடுப்பதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரிடம் விடுத்த வேண்டுகோளுக்கினங்கவே இந்த நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இந்த கலாச்சார மண்டப நிர்மானப் பணி தற்போது இடம்பெற்று வருவதாகவும் பள்ளிவாயலின் செயலாளர் எம்.ஏ.அஷ்ரப் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இயங்கிவரும் தொற்றா நோய் பிரிவுக்கு தளபாட கொள்வனவு செய்வதற்காக ரூபா 1 இலட்சம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் இயங்கி வரும் தொற்றா நோய் பிரிவுக்கு சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக வெளி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து அங்குள்ள தளபாடங்கள் குறைவாகவே காணப்படுகின்றது. இக்குறைபாட்டை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.எல்.எம்.நஸீரிடம் விடுத்த வேண்டுகோளுக்கினங்கவே ரூபா 1 இலட்சம் நிதி தொற்றாநோய் பிரிவு தளபாட கொள்வனவு செய்வதற்காகவேண்டி கிடைக்கப் பெற்பெற்றுள்ளதாகவும் வைத்திய அத்தியட்சகர்  டாக்டர் கே.எல்.எம்.நக்பர் மேலும் தெரிவித்தார்.

அபு அலா –

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2