எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, August 17, 2015

சுதந்திரத் தினத்தன்று திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்

Print Friendly and PDF

சுதந்திரத் தினமான ஆகஸ்ட் 15 சனிக்கிழமை அன்று திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் மலேசியா பிரிவு சார்பாக டத்தோ தஸ்லிம் முஹம்மது இப்ராகிம் கான் என்ற நசுருல்லா கான் ஆகியோர் பங்கேற்றனர்.
 


       
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் படித்த மாணவர்கள் இந்தியா மற்றும் தமிழகத்திலும் மற்றும் உலகத்தில் அனைத்து நாடுகளிலும் கல்லூரியில் படித்த மாணவர்கள் பல்வேறு இடங்களில் பணிப்புரிகினறனர். இவர்கள் வருடந்தோறும் உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும் ஆகஸ்ட் 15ம் தேதி அன்று கல்லூரிக்கு வந்து விடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு முன்னாள் மாணவர் சந்திப்பு கூட்டம் கல்லூரி வளாகத்தில் உள்ள அப்துல் கபூர் கலையரங்கில் நடைப்பெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் முஹம்மது சாலிகு தலைமை வகித்து பேசுகையில் முன்னாள் மாண்வர் சங்க செயல்ப்பாடுகள் குறித்து அவர்கள் வழ்ங்கி வரும் உதவிகள் குறித்து விளக்கி கூறினார். கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் எம் சேக் முஹம்மது அனைவரையும் வரவேற்று பேசினார். துணை முதல்வர் முதல்வர் எஸ். இஸ்மாயில் முஹைதீன் முன்னாள் மாணவர் சங்கத்தின் செயல்ப்பாடுகள் குறித்து ஆண்டறிக்கை வாசித்தார்.

சுயநிதிப் பிரிவு இயக்குனர்கள் அப்துல் காதர் நிகால் ஜமால் முஹம்மது யாசின் ஜுபைர் கல்லூரியின் மேலாண்மை இயக்குனர் அப்துஸ் சமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி தலைவர் எம். ஜே. ஜமால் முஹம்மது பிலால் கல்லூரி செயலர் முனைவர் காஜா நஜுமுத்தீன் உதவி செயலர் ஜமால் முஹம்மது சாகிப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இக்கல்லூரியில் படித்த மாணவர்கள் மத்திய மாநில அரசு பணிகளில் பணிப்புரியும் முன்னாள் மாணவர்களுக்கும் அதே போன்று வெளிநாடுகளில் பணிப்புரிந்து வரும் முன்னால் மாணவர்களுக்கு கல்லூரி சார்ப்பில் சிறந்த மாணவர்கள் என்ற விருதுகளை முன்னாள் நாடளுமன்ற உறுப்பினரும் சர்வதேச காயிதே மில்லத் பேரவையின் ஒருங்கினைப்பாளருமான எம். அப்துல் ரஹ்மான்இ டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் வெங்கட்ராமன்இ திருச்சி மாவட்ட முன்னாள் மாணவ சங்க தலைவர் ஏ.கே.உசேன் ஆகியோர் வழங்கினார்கள்

கிழ்கண்டவர்களுக்கு சிறந்த முன்னாள் மாணவர்களுக்காண விருதுகள் வழ்ங்கப்பட்டன அதன் விபரங்கள் வருமாறு:

கல்லூரியின் தலைவர் ஜமால் முஹம்மது பிலால் சிங்கப்பூரில் பணிப்புரியும் ஏஸ். எம். அப்துல் காதர் சகாப்புதீன் ஹுசைன் ஷாஇ குவைத் நாட்டில் பணிப்புரியும் எம். அ. பசிர்தீன் துபாய்யில் பணிப்புரியும் முஹம்மது பசுர்தீன் சவுதி அரேபியாவில் பணிப்புரியும் கமாலுதீன் அசனா லப்பை பொறியாளர் கே. அர். செய்யது அப்துல் சுப்ஹான்   சேக் மஸ்த்தான் வலி தில்லி பல்கழைக்கழக பேராசிரியர் முனைவர் அ. வெஙகட் ராமன் சென்னை தமிழ் அறிவியல் நிறுவனத்தின் நிறுவுனர் முனைவர் ஹாஜி மணவை முஸ்தபா சென்னை புது கல்லூரியின் விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் அ. ஜவகர் அலி திருச்சி காவேரி பெண்கள் கல்லூரி தலைவர் ஆடிட்டர் முருகன்இ திருச்சியை சேர்ந்த ஆடிட்டர் மகேஷ் திருநெல்வேலி அரசுப் பொறியல் கல்லூரியின் வேதியல் துறை தலைவர் முனைவர் ராஜ கோபால் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரும் விடுதியின் இயக்குனருமான முனைவர் பி.என்.பி முஹம்மது சகாப்புதீன் திருச்சி கிழக்கு தாசில்தார் சீராஜுதீன் திருச்சி மாவட்டம் தொட்டியம் தாசில்தார் அக்பர் அலி போடியை சேர்ந்த பிராபகர் திருச்சியை சேர்ந்த பசீர் அகமது ஈரோடு ஈ.கே.எம். அப்துல் கனி மதராசா பள்ளி ஆசிரியர் காதர் முஹைதீன் பெங்குளூரை சேர்ந்த முனைவர் வெங்கட்ராமன் அமெரிக்காவில் பணிப்புரியும் சந்தான லட்சுமி கணேஷ் முனைவர் அனிசா ஆகியோர்க்கு வழங்கப் பட்டது.

கூட்டத்தின் குவைத் ஜித்தா சிங்கப்பூர் புருனை மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வி படிப்புக்காக உதவித் தொகையாக பல லட்சம் ரூபாயை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் கல்லூரி செயலர் ஏ.கே. காஜா நஜுமுத்தீன் உதவி செயலர் ஜமால் முஹம்மது ஆகியோரிடம் வழ்ங்கினார்கள்.

மலேசியா பிரிவு தலைவர் டத்தோ தஸ்லிம் முஹம்மது இப்ராகிம். மலேசியா நசுருல்லா கான். சென்னைப் பிரிவு தலைவர் அப்துல் காதர் திருச்சிப் பிரிவு செயலர் அப்துல் அலிம் பொருளாளர் ரியாஸ்இமுன்னாள் முதல்வர்கள் பேராசிரியர் அப்துல் சமது முனைவர் ஆர். காதர் முகைத்தீன் முனைவர் முஹ்ம்மது ஜிந்தாஷா முன்னாள் துணை முதல்வர் முனைவர் மன்சூர் அய்மான் மகளிர் கல்லூரி தாளாளர் எம்.எம். சாகுல் ஹமீது விடுதி ஒருங்கிணைப்பாளர் முஹம்மது சர்புதீன் முன்னாள் தாசில்தார் அம்சத் இப்ராகிம் துவரங்குறிச்சி ஹபிப் ரஹ்மான் செய்தியாளர் எம்.கே. சாகுல் ஹமீதுஇ திருச்சி ஷாகின்ஷா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள் முடிவில் கல்லூரி துணை முதல்வர் முனைவர் முஹம்மது இப்ராகிம் நன்றி கூறினார்.

(திருச்சி - சாகுல் ஹமிது)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2