Published On: Wednesday, December 30, 2015
உலகத்தை ஆட்சி செய்தவர்கள் இன்று எத்தைனையேபேர் மரனித்து மண்ணறையில் - மாகாண முதலமைச்சின் செயலாளர்
உலகத்தை ஆட்சி செய்தவர்கள் இன்று எத்தைனையேபேர் மரனித்து மண்ணறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் செய்த சேவைகளையும், நல்லவைகளையும் நாம் வாழும்வரை நினைவு கூர்ந்து இன்றைய இளம் சந்ததியினர்களுக்கு எடுத்துக்கூறவேண்டும். அப்போதுதான் அவர்களின் பெயர்கள் உலகம் அழியும்வரை மிளிர்ந்து கொண்டிருக்கும் என கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை விளையாட்டுக் கழக வீரர்களையும், சமூக சேவையாளர்களையும் வாழ்த்தி கௌரவிக்கும் விழா அட்டாளைச்சேனையில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த காலங்களில் எமது நாட்டுக்கும், மாகாணத்துக்கும் மாவட்டத்துக்கும் ஏன் எமது பிரதேசத்துக்கும் நல்ல பல சேவைகளை செய்துவிட்டு பலர் மான்டுவிட்டனர். இன்னும் சிலர் தங்களின் சேவைகளை வெளிக்காட்டாமல் தொடர்ந்தும் செய்துகொண்டிருக்கின்றனர். இவ்வாறானவர்களை இன்றை இளம் சமூதாயங்களுக்கு எடுத்துக்கூறவேண்டும். அப்போது அவர்களின் சமூகப்பற்றுள்ள சேவைகளை வெளியுலகத்துக்கு எடுத்துக்காட்ட முடியும்.
அதுமாத்திரமல்லாமல், சமூகப்பற்றுடன் செயற்பட்டுவரும் அரசியல்வாதிகளும், அரச உயரதிகாரிகளும் என்றுமே சமூகத்தில் மதிக்கப்பட்டு, அவர்கள் வாழும்வரை வாழ்த்தப்பட்டவர்களாகவும், மரனித்த பின்னர் அவர்களின் சேவைகள் தொடர்ந்தும் ஆண்டாண்டுகாலம் ஞாபகப்படுத்தப்பட்டு பேசப்பட்டுவரும் சமூதாயங்களாக நாம் வாழவேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசிம், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், பொத்துவில் தொகுதி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல வீர்ர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அபு அலா –