Published On: Tuesday, January 19, 2016
1100 தாதியர் பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு
தேசிய ரீதியில் உள்ள 1100 தாதியர் பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (19) மஹரகமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதார, மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் பைசால் காசிம் ஆகியோர் கலந்துகொண்டு இந்த நியமனப் பத்திரங்களை வழங்கி வைத்தனர்.
அபு அலா, ஏ.எல்.எம்.நபார்டீன் -






