Published On: Tuesday, January 19, 2016
மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி - பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது
மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை மஸ்கெலியா பொலிஸார் 19.01.2016 அன்று கைது செய்துள்ளனர்.
மஸ்கெலியா ஸ்டஸ்பி தேவகந்த என்னும் பிரதேச பாடசாலை ஒன்றின் திருமணமான இரண்டு பிள்ளைகளின் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தரம் 11ல் கல்வி பயிலும் பாடசாலை மாணவியை, ஆசிரியர் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவியின் பெற்றோர்கள் 19.01.2016 அன்று அட்டன் கல்வி வலய அதிகாரிகளுக்கு முறையிட்டதன் பின் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த ஆசிரியரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14ம் திகதி குறித்த ஆசிரியரின் வீட்டில் மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக குறித்த மாணவி பொலிஸார்க்கு வாக்குமூலம் அளித்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
மாணவி மருத்துவ பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய ஆசிரியர் 20.01.2016 அன்று அட்டன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
(க.கிஷாந்தன்)
