Published On: Tuesday, January 19, 2016
மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்திற்கான கடவுச்சீட்டு வழங்குகின்ற கிளை காரியாலயம் ஒன்று அமையப்பெறவேண்டும்- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்.
மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்திற்கான கடவுச்சீட்டு வழங்குகின்ற கிளை காரியாலயம் ஒன்று அமையப்பெறவேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்......
கடந்தகால ஆட்சியின் போது மக்களுடைய நன்மை கருதாது தங்கள் தங்களுடைய அரசியல் இலாபங்களை பெற்று கொள்வதற்கான நடவடிக்கைகளில் கடந்த ஜனாதிபதி உட்பட அனைவரும் செயற்பட்டிருந்தார்கள், இதனை சகித்துக் கொண்டு தொடர்ந்தும் அந்த ஆட்சியில் நம்பிக்கை இழந்த மக்கள் மிக பாரிய எதிர்பார்ப்புடன் சர்வாதிகார ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வினை எதிர்த்து நல்லாட்சிக்காக தனது உயிரைக் கூட துட்சமென மதித்து களமிறங்கிய அதி உத்தம ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆட்சிபீடத்திற்கு மக்கள் கொண்டுவந்தார்கள். அம் மக்களுடைய எதிர்பார்ப்பு நல்லட்சினூடாக தமது வாழ்க்கை சுபீட்சமடைய வேண்டும். மக்கள் மனங்களை வென்ற அதி உத்தம ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மக்களுக்கு அர்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துநிற்கின்றார்கள், இந்த வகையில் மக்களுடைய எதிர்பார்புக்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் முகமாக கிழக்கு மாகாணத்தில் தாங்கள் கடவுச்சீட்டுக்களை பெற்றுகொள்வதற்கான ஓர் கிளை காரியாலயம் ஒன்றை மட்டக்களப்பில் ஏற்படுத்தி தரவேண்டு என்று நாங்கள் கேட்டுகொண்டிருக்கின்றோம்.
இப்பொழுது இருக்கின்ற நடைமுறையின் பிரகாரம் உரியவர்கள் பிரத்தியோகமாக சென்றே அவர்களுடைய கடவுச்சீட்டுக்களை பெற வேண்டியுள்ளதால் கிழக்கு மாகாண மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.
இந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் கடவுச்சீட்டு பெறுவதறகென சம்மாந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பிரயாணம் செய்தவர்கள் விபத்துக்குள்ளாகி ஓர் சிறுவன் உட்பட ஆறு பேர் இஸ்தலத்திலே கொல்லப்பட்டார்கள்.
கொழும்பு, கண்டி, வவுனியா போன்ற மூன்று இடங்களில் தற்பொழுது கடவுச்சீட்டுக்களை வழங்குகின்ற கிளை காரியாலயங்கள் இருக்கின்றன, இதனுடன் சேர்ந்து இன்னுமொரு கிளை காரியாலயம் ஒன்றினை கிழக்கு மாகாண மக்களுக்கு அமைத்து தரவேண்டும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள், ஜனாதிபதி, பிரதம மந்திரி மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஆகியோருக்கு கடிதமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதி மத்திய அரசாங்கத்தில் அங்கம்வகிக்கின்ற கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்காக ஒன்றுபட்டு பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
(ஜுனைட்.எம்.பஹ்த்)
