Published On: Tuesday, January 19, 2016
24 மணித்தியாலயங்களுக்கு 73 வீதமானவர்கள் இறந்துபோகும் அபாயம் - வைத்திய அத்தியட்சகர்
உலக சுகாதார நிறுவனத்தின் கடந்த 2015 ஆம் ஆண்டின் தகவலின்படி உலகத்தில் உற்பதியாகும் மருந்து வகைகளை நிறுத்திவிட்டு அதன் பாவனைகளை 24 மணித்தியாலயங்களுக்கு கட்டுப்படுத்தினால் உலகத்திலுள்ள சனத்தொகையில் சுமார் 73 சத வீதமானவர்கள் இதன் மூலம் இறப்பைச் சந்திப்பதகாக அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் தெற்றாநோய் கிசிச்சைப் பிரிவின் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.ரீ.எப்.நப்தா தலைமையில் இன்று காலை (19) தெற்றாநோய் சிகிச்சை பரிசோதனைக்கு சிகிச்சை பெறவந்தவர்களிடத்தில் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
உலகத்திலுள்ள சனத்தொகையில் சுமார் 95 வீதமானவர்கள் இன்று நோயுள்ளவர்களாகவும், அவர்களில் 90 வீதமானவர்கள் மருந்து வகைகளை சாப்பிடக்கூடயவர்களாகவும் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் வாழ்க்கை மருந்து வகைகளைக் கொண்டு அதன்மூலமாக உயிர் வாழக்கூடியவர்களாகவே இருந்து வருகின்றனர்.
நோய்க்கு இனம், மதம், ஆயுள்வேத மருந்துகள், ஆங்கல மருந்துகள் என்று தெரியாது அதற்கு உரிய நிவாரணங்கள் கிடைத்தால் அதற்கெற்றாப்போல் தங்களின் உடம்பிலுள்ள நோய்கள் குனமாகும். அதற்காக ஆயுள்வேத வைத்தியத்துடன் தொடரந்தும் இணைந்திருந்தால் உங்களின் நோய்க்கு தகுந்த நிவாரணங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
அபு அலா, ஏ.எல்.எம்.நபார்டீன் –


