Published On: Monday, January 18, 2016
இயற்கை இடர்பாடுகள் காரணமாக உயிரிழந்த 23 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: ஜெயலலிதா உத்தரவு
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:புதுக்கோட்டை மாவட்டம், அம்புராணி கீழாநிலை கிராமத்தைச் சேர்ந்த செம்புலிங்கம் என்கிற சின்னா; புதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார்; திருவள்ளூர் மாவட்டம், சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மனைவி மஞ்சுளா, லால்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மனைவி காந்திமதி; ராமநாதபுரம் மாவட்டம், கருவாட்டுனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கைலாசம் என்பவரின் மனைவி காமாட்சி; கன்னியாகுமரி மாவட்டம், வள்ளவிளையைச் சேர்ந்த வினு
நாகப்பட்டினம் மாவட்டம், சோத்தியகுடி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரேசன்; நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவராமன்; நாகப்பட்டினம் மாவட்டம், பழையார் கிராமத்தைச் சேர்ந்த மதன்ராஜ் மற்றும் ராஜா, திருநெல்வேலி மாவட்டம், அணைத்தலையூர் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி; தஞ்சாவூர் மாவட்டம், கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சநாதன்; சருக்கை கிராமத்தைச்சேர்ந்த பார்த்தசாரதி என்பவரின் மனைவி பானுமதி
விழுப்புரம் மாவட்டம், சித்தலூர் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன்; தஞ்சாவூர் மாவட்டம், குருவிக்கரம்பை கிராமத்தைச் சேர்ந்த பாரதிதாசன்,கடலூர் மாவட்டம், திருப்பணாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி சுந்தர்ராஜ்; வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த நசீர் அகமது; பெரம்பூரைச் சேர்ந்த ராஜி என்பவரின் மகன் சிறுவன் அஜய்,தூத்துக்குடி மாவட்டம், கீழ்ப்பிடாகை அப்பன் கோவில் கிராமத்தைச் சேர்ந்த கசமுத்து மற்றும் முத்துகிருஷ்ணன்,கன்னியாகுமரி மாவட்டம், ஏழுதேசம்–சி சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த சிலுவையன்; ராமநாதபுரம் மாவட்டம், தாளையடிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முனியாண்டி ஆகியோர் இயற்கை இடர்பாடுகள் காரணமாக உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
உயிரிழந்த இந்த 23 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
(திருச்சி - சாஹுல் ஹமீட்)