Published On: Friday, January 01, 2016
பிரதி அமைச்சர் ஹரீஸ் இந்தியா பயணம்!
இந்தியாவில் நடைபெற்ற ஊட்டச்சத்து பானங்கள் மற்றும் உணவுகளை தயாரிக்கும் நிறுவனங்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும்இ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் புதன்கிழமை (30) இந்தியாவுக்கு ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவின் புனே நகரில் (30) நடைபெற்ற மாநாட்டில் பிரதி அமைச்சர் ஹரீஸ் கலந்து கொண்டதுடன் ஊட்டச்சத்து பானங்கள் மற்றும் உணவுகளை தயாரிக்கும் தொழிற்சாலையினையும் பார்வையிட்டார்.
இலங்கையின் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டு விளையாட்டு வீரர்களுக்கு ஊட்டச்சத்துள்ள பானங்கள் மற்றும் உணவுகளை வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(ஹாசிப் யாஸீன்)