Published On: Monday, January 11, 2016
இந்தியா சகிப்புத்தன்மைமிக்க நாடு வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் புகழாரம்
இந்தியா சகிப்புத்தன்மைமிக்க நாடு என்று வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் புகழாரம் சூட்டியுள்ளார்.
டெல்லியில் 8-ம் தேதி இலக்கிய திருவிழா தொடங்கியது. கடைசி நாளான நேற்று ஏராளமான எழுத் தாளர்கள் பங்கேற்றனர். இதில் வங்க தேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கூறியதாவது:ஒவ்வொரு சமூகத்திலும் சிலருக்கு சகிப்புத்தன்மை அறவே இருக்காது. அவர்கள் இந்து மதத் தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் அல்லது இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம்.
என்னைப் பொறுத்தவரை இந்தியா சகிப்புத்தன்மைமிக்க நாடு, ஒரு சிலர்தான் பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர். ஒவ்வொரு வருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை சுதந்திரம் மிகவும் அவசியமானது. மத அடிப்படைவாதம் உட்பட அனைத்து தீய சக்திகளுக்கு எதிரா கவும் மக்கள் தீரமாகப் போரிட வேண் டும். இவ்வாறு அவர் பேசினார்.
மும்பையை சேர்ந்த எழுத்தாளர் சுதீந்தர குல்கர்னி கூறியதாவது:மதம் குறித்துப் பேசும்போது மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தக்கூடாது. அந்த வகை யில் சுதந்திரத்திலும் சில கட்டுப் பாடுகளை கடைப்பிடிப்பது அவ சியம். இந்தியா சகிப்புத்தன்மை மிக்க நாடு என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. கடந்த 2014 மே மாதத்துக்குப் பிறகு சகிப்பின்மை அதிகரித்திருப்பதாகக் கூறுவது அர்த்தமற்றது.இவ்வாறு அவர் கூறினார்.
