Published On: Sunday, January 03, 2016
சாய்ந்தமருது பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல்
சாய்ந்தமருது பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடலும்இ பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து ஓய்வுபெற்றுச் சென்ற மற்றும் மாற்றலாகிச் சென்றவர்களுக்குமான பிரியாவிடை வைபவமும் நேற்று சனிக்கிழமை (02) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளரும், பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் தலைவருமான ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கணக்காளர் எம்.எம்.உசைனா, நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை, திவிநெகும தலைமை முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலகத்தில் கடமையாற்றி ஓய்வுபெற்றுச் சென்ற கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.ஜமால்தீன், கிராம சேவை உத்தியோகத்தர் ஐ.எல்.ஹம்சா ஆகியோருக்கு வாழ்த்துப்பா, அன்பளிப்பு மற்றும் நினைவுச் சின்னம் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மாற்றலாகிச் சென்ற கலாச்சார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஷ்ரஃப், முகாமைத்துவ உதவியாளர் எம்.எம்.றபீக், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.றிஸ்வானா ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் விஷேட அம்சமான சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களை மாற்றலாகிச் சென்ற முகாமைத்துவ உதவியாளர் எம்.எம்.றபீக் மாலை அணிவித்து அன்பளிப்பு வழங்கி கௌரவித்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் 2016ம் ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவும் பகற்போசன நிகழ்வும் இடம்பெற்றது.
(ஹாசிப் யாஸீன்)



