Published On: Sunday, January 03, 2016
க.பொ.த. உயர்தர பரீட்சையில் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மாணவி விஞ்ஞான பிரிவில் நுவரலியா மாவட்டத்தில் முதலாம் இடம்
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள், பரீட்சைகள் திணைக்களத்தினால் 03.01.2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் க.பொ.த. உயர்தர பரீட்சையில் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மாணவி விஞ்ஞான பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மாணவியான சந்தரன் சஜிதா (சுட்டென் – 6372708) என்ற மாணவியே மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார். இவர் இலங்கை ரீதியில் 113ம் இடத்தினை பெற்றுள்ளார். இவர் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் அதிகூடிய சித்திகளை பெற்றிருந்ததுடன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.
இவர் ஆசிரியர்களான பி.சந்தரன் – கே.சுமதி தம்பதியரின் புதல்வியாவார். இவருக்கு பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
(க.கிஷாந்தன்)



