Published On: Friday, January 15, 2016
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயருக்கு தபால் தலை வெளியீடு
அப்துல்கலாம் அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயருக்கு, ஓய்வு பெற்ற தபால்துறை அதிகாரிகள், தபால் தலை வெளியிட்டு கவுரவித்தனர்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், இந்தியாவுக்கு ஆற்றிய சேவைக்காக அவரது குடும்பத்தினரை கவுரவிக்கும் விதமாக, உடன் பிறந்த அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயர் உருவ படத்தின் தபால் தலையை, ஓய்வு பெற்ற தபால்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் , கலாம் வீட்டில் அவரது அண்ணனிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் கலாம் பேரன் சேக் சலீம், ஓய்வு பெற்ற தபால்துறை ஊழியர்கள் சங்க தலைவர் குருசாமி, உதவி தலைவர் முத்துராமலிங்கம், கலாம் உறவினர்கள் ஜெய்னுலாபுதீன், நசீமா மரைக்காயர், தாய்தமிழ் அறக்கட்டளை தலைவர் பழனிச்சாமி பங்கேற்றனர்.
