Published On: Sunday, January 10, 2016
‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதை நூல் வெளியீட்டு விழா
படைப்பாளிகள் உலகம் அனுசரனையில், வள்ளுவர்புரம் செல்லமுத்து வெளியீட்டகத்தினால் வெளியிடப்படும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பகுதி நேர அறிவிப்பாளரும், கவிஞருமான எஸ். ஜனூஸ் எழுதிய ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 24.01.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணிக்கு கொழும்பு- மருதானை, தெமட்டகொட வீதியில் அமைந்திருக்கும் வை.எம்.எம்.ஏ. கேட்போர் கூடத்தில் கலாபூஷணம் தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமையில் நடைபெறவுள்ளது.
மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் முன்னிலையில் நடைபெறும் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நகர அபிவிருத்தி நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் கல்ந்து சிறப்பிக்கின்றார். கௌரவ அதிதியாக இன நல்லுறவுக்கான தேசிய வேலைத் திட்டத்தின் தலைவர் அஷ்ஷெய்க். அப்து காதர் மசூர் மௌலானா அவர்களும் மற்றும் பல சிறப்பதிதிகளும் கலந்து கொள்கின்றனர்.
நூலின் முதற்பிரதியை இலக்கியப் புரவலர் ஹாஷிம் ஒமர் பெற்றுக் கொள்கிறார். ’மூசாப்பு ஒரு முழ வெயிலும்; கவிதை நூல் வெளியீட்டு விழாவில் வரவேற்புரையை கலாபூஷணம் கவிமணி நஜ்முல் ஹுசைனும், அறிமுகவுரையை மூத்த வானொலிக் கலைஞர் கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னாஹ்வும், மற்றும் நூலின் வெளியீட்டுரையை செல்லமுத்து வெளியீட்டகத்தின் நிறுவுனர் கவிஞர் யோ.புரட்சியும் வழங்குகின்றனர்.
எஸ். ஜனூஸின் ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்; கவிதை நூல் பற்றிய நயத்தலுரையை எழுத்தாளரும், திறனாய்வாளருமான சிராஜ் மசூர், கருத்துரையை மேமன் கவியும் மற்றும் வாழ்த்துரைகளை அஷ்ஷெய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா அவர்களும், மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத்தும் நிகழ்த்துவதுடன் கவி வாழ்த்துக்களை கவிஞர் வே. முல்லைத்தீபனும், கிராமத்தான் கலீபாவும் பாடுகின்றனர்.
மேலும் நிகழ்வில் சிறப்புரையை கனடா, படைப்பாளிகள் உலகத்தின் நிறுவுனர் திரு.ஐங்கரன் கதிர்காமநாதனும், ஏற்புரையை நூலாசிரியர் எஸ்.ஜனூஸ் ஆகியோரும் வழங்குகின்றனர். இந் நிகழ்வுக்கு கலை இலக்கிய, ஊடக அன்பர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

