எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, January 22, 2016

திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் சார்பில் சமுதாய விழிப்புணர்வு கருத்தரங்கம்

Print Friendly and PDF

திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைதிருச்சி மாவட்ட ஐக்கிய ஜமாஅத் மற்றும் அன்னை கதீஜா(ரலி) பைத்துல் மால் இணைந்து சமுதாய விழிப்புணர்வு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. 






திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைதிருச்சி மாவட்ட ஐக்கிய ஜமாஅத் மற்றும் அன்னை கதீஜா(ரலி) பைத்துல் மால் இணைந்து சமுதாய விழிப்புணர்வு சிறப்பு கருத்தரங்கம் திருச்சி தென்னூர் ஹைரோடு பெரிய பள்ளி வாசலில்  நடைபெற்றது. விழாவுக்கு திருச்சி மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் முகமது அன்சாரி தலைமை வகித்தார். நிகழ்ச்சியை திருச்சி ஜாமிஆ மின்ஹாஜுல் இஸ்லாம் அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லவி காரி பழ்லுல்லாஹ் ஹஸனீ ஆலீம் கிராஅத் தொடங்கி வைத்தார்.திருச்சி தென்னூர் ஹைரோடு  பெரிய பள்ளிவாசல் இமாம் மவ்லவி ஹஸன் முகம்மது பாக்கவி அனைவரையும் வரவேற்று பேசினார். திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளர் மவ்லவி முகம்மது சிராஜுத்தீன் மன்பஈ துவக்கவுரை நிகழ்த்தினார்.  ஜமாஅத் உலமா சபை துணைத்தலைவர் மவ்லவி முப்தி உமர் பாருக் மஹ்ழரி, திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் முனைவர் ஏ.கே காஜா நஜ்முதீன், இந்துய யூனியன் முஸ்லீம் லீக் மாநில தொழிலாளர் அணி செயலாளர்  ஜி.எம் ஹாஷிம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். 

திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை பொதுச்செயலாளர் மவ்லவி முகம்மது ஷரீப் யூசுபி, நிர்வாகிகள் நெருக்கடிகளூக்கு தீர்வு என்ன என்ற தலைப்பில் பேசுகையில் ஜமாஅத் நிர்வாகிகள் பல்வேறு விஷயங்களுக்காக  நெருக்கடிகளை எப்படியெல்லாம் தீர்வு காண வேண்டும் என்பதையும் அதன் வழிமுறைகளையும் ஆதாரத்துடன் எடுத்து பேசினார்.  தமிழ் மாநில ஜமாத்துல் உலாமா செய்தி தொடர்பாளரும் மவ்லவி ஹாபிழ் எஸ்.எம் முகமது மீரான் மிஸ்பாஹி  நிர்வாகிகள் சந்திக்கும் நெருக்கடி என்ற தலைப்பில் பேசுகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஜமாஅத்துக்களில் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தினம் தினம் பல்வேறு வகையான பிரச்சனைகள் நெருக்கடிகள் ஏற்படுகினறன அவைகளெல்லாம் எப்படியெல்லாம் ஷரிஅத் சட்டப்படி கையாள வேண்டும் என்பதை விளக்கத்தையும் அதன் ஆதரத்தையும் எடுத்துப் பேசினார். 

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை செய்திப்பிரிவு தலைவரும் சென்னை மந்தவெளி ஈத்கா பள்ளி இமாம் மவ்லவி கே.எம் இல்யாஸ் ரியாஜி பொதுச்சிவில் சட்டத்தின் விளைவுகள் பற்றிய தலைப்பில் பேசுகையில் இந்த மத்திய அரசு  பொதுச்சிவில் சட்டத்தை கொண்டு வர் வேண்டுமென்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதை தடுக்க அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும். பொதுச்சிவில் சட்டம் கொண்டு வந்தால் அதன் விளைவுகள் என்ன என்பதை பற்றி விளக்கமாக கூறியதல்லாமல் பல்வேறு ஆதாரங்களுடன் பொதுசிவில் சட்டத்தின் விளைவுகள் பற்றியும் எடுத்து கூறினார். 

உலவியல் துறை வல்லுநரும் மவ்லவி முஜீபுர் ரஹ்மான் உமரி பெருகி வரும் தலாக்கை கட்டுப்படுத்த மஹல்லா தோரும் கவுன்சிலிங் அவசியம் என்ற தலைப்பில் பேசுகையில் நமது நாட்டில் தலாக் விஷயத்தை பொறுத்தவரை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் இருப்பதால் தான் நம் சமுதாயத்தில் தாலாக் சொல்லி விட்டு கணவன் மனைவி பிரிந்து வாழ்கின்றனர். ஆனால் தலாக் சொல்வது என்பது பற்றி முழுமையாக தெரிந்த பிறகு தான தலாக் விஷயம் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் இக்காலக்கட்டத்தில் சிறு சிறு பிரச்சனை ஏற்பட்டாலே திடீரென்று தலாக் சொல்வது ஷரிஅத் சட்டப்பிராகரம் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாது. முழுமையாக தெரிந்து கொண்டால் தான் ஏற்றுக்கொள்ளப்படும்.தலாக் கேட்டு வரும் கணவன் மனைவியிடம் மஹல்லா தோறும்  சரிஆன கவுன்சிலிங் முறையை கொடுத்து அவர்களுக்கு ஷ்ரிஅத் சட்டத்தை எடுத்துரைத்து அவர்களை சேர்த்து வைக்க வேண்டியது மஹல்லா ஜமாஅத் கடைமையாகும் அதே போன்று ஒவ்வொரு மஹல்லாவிலும் கண்டிப்பாக தலாக்கை கட்டுப்படுத்த கவுன்சிலிங் மையத்தை அமைக்க வேண்டும் என்று கூறினார். தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபை துணைதலைவரும்திருச்சி மாவட்ட தலைவருமான மவ்லவி ஹாபிழ் காரி முப்தி ரூஹுல் ஹக் ரஷாதி நிறைவுறையாற்றினார். 


விழாவில் இந்திய யூனியன் முஸ்லீம் தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே ஹபிபுர் ரஹ்மான், தலைவர் வி.எம் பாருக் எம்.எல்.எஸ் தலைவர் எம்.கே.எம் உஸ்மான், திருச்சி மாவட்ட மகளிர் சங்க கலீல் ரஹ்மான், முன்னாள் ஜமால் முகமது  கல்லூரி முதல்வரும், மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய நலக்கூட்டனி தலைவருமான   பேராசிரியர் அப்துல் ஸமது, ஏ.டபுள்யூ. சிறுபானமை பிரிவு ஷஹீன்ஷா சாஹிப், மணப்பாறை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மவ்லவி சிராஜுத்தீன் தாவூதி,லால்குடி ஜும்ஆ பள்ளிவாசல்  தலைவர் பர்வீன் கனி, மணப்பாறை ஜமாஅத் செயலாளார் நாசர் முகமது, திருச்சி ஜங்சன் பள்ளி ஜமாஅத் தலைவர்  அல்ஹாஜ் முஸ்தபா கமால்,திருச்சி ஆற்காடு எண்டோன்மெண்ட் நிர்வாக அதிகாரி பஷீர் அஹமது என்ற நௌசாத், மற்றும் திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து மஹல்லா ஜமாஅத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஜமாஅத் உலமா சபை நிர்வாகிகள் மற்றும் உலமா பெருமக்கள், ஜமாஅத்தார்கள்  கலந்து கொண்டனர்.இறுதியில் சுப்ரமணியபுரம் ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மவ்லவி  அப்துல் ரஹீம் மன்பஈ நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை அன்னை கதீஜா பைத்துல் மால் தலைவர் மவ்லவி ஹாபிழ் முகம்மது பஸீம் தாவூதி தொகுத்து வழங்கினார். 

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2