Published On: Friday, April 08, 2016
பரிசளிப்பு விழா
மத்திய மாகாணம் நுவரெலியா வலயத்தின் கோட்டம் மூன்று ஹோல்ப்ரூக் டயகம கிழக்கு தமிழ் மகா வித்தியாலயத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பெற்றோர்களின் ஏற்பாட்டில் பாடசாலையின் அதிபர் திரு எஸ்.சேகர் அவர்களின் தலைமையில் 08.04.2016 அன்று காலை 10 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெறும்.
இந்நிகழ்வில் வலய கல்விப்பணிப்பாளர் திரு.பியதாச மற்றும், கோட்டக் கல்விப் பணிப்பாளர்களும், ஆசிரியர் ஆலோசகர்கள், பிரதேச அதிபர்கள், பிரதேச காவல்துறை அதிகாரிகள், மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.
இதன்போது மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட உள்ளது.
(க.கிஷாந்தன்)